ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் ஹிந்தி நடிகரான அஜய் தேவகன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக அவர் சம்பளம் எதுவும் வாங்க மறுத்துவிட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் அவர் ‘கேமியோ’ ரோலில்தான் நடிக்கிறாராம்.
இருந்தாலும் படத்தின் தயாரிப்பாளர் ராம்சரண், ஜுனியர் என்டிஆர் ஆகியோருக்கு அளிக்கும் சம்பளத்தையோ, அல்லது அஜய் தேவகன் ஒரு முழு படத்திற்கு வாங்கும் சம்பளத்தையோ தரத் தயார் என்று சொன்னாராம். இருந்தாலும் ராஜமவுலி உடனான நட்புக்காக தனக்கு சம்பளமாக எதுவும் தேவையில்லை என அஜய் மறுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
ஹிந்தியில் அஜய் தேவகன் ஒரு படத்திற்கு அதிகபட்சமாக 40 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.

