ஒருபக்கம் மீடூ விவகாரம் அமுங்கி விட்டது போல் காணப்பட்டாலும், இன்னொரு பக்கம் ஏதோ ஒரு விதத்தில் அது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் பாலிவுட் உதவி நடன அமைப்பாளர் திவ்யா என்பவர், பிரபல பாலிவுட் நடன அமைப்பாளர் கணேஷ் ஆச்சார்யா மீது மகாராஷ்டிராவில் உள்ள அம்போலி காவல் நிலையத்தில் பாலியல் குற்றச்சாட்டு புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் அவர் கூறும்போது, “கணேஷ் ஆச்சார்யா, சினிமா நடன அமைப்பாளர்கள் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அவரை எங்களது பணி நிமித்தமாக சந்திக்க செல்லும்போது அவர் தொடர்ந்து தனது மொபைலில் நீலப்படங்களை பார்த்து வந்தார்.. அதுமட்டுமல்ல இது போன்ற படங்களை பார்த்தால் உனக்கும் பிடிக்கும் எனக்கூறி என்னையும் ஆபாசம் படம் பார்ப்பதற்கு வற்புறுத்தினார். அவரது இந்த செயல் என்னை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதிலிருந்து அவர் பெண் பித்தர் என்பது தெரிய வந்ததுடன் சூதாட்டம், கிரிக்கெட் பெட்டிங் போன்ற தொடர்புகளும் அவருக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது” என்று அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இவர் நடன அமைப்பாளர் சரோஜ் கான், நடிகை தனுஸ்ரீ தத்தா ஆகியோரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தனர்.

