கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான அக்ஷரா ஹாசனின், தனிப்பட்ட படங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையதளங்களில் வைரலாக பரவியது. இதில் அக்ஷரா உள்ளாடைகளுடன் மட்டும் காட்சி அளித்ததால் நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர்.
இதுகுறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்த அக்ஷரா, “அது படத்திற்காக எடுக்கப்பட்ட டெஸ்ட் ஷூட். தேவைப்பட்டால் மீண்டும் அதுபோன்ற படங்களை எடுப்பேன்” என்று கூறியிருந்தார். இது நெட்டிசன்களை இன்னும் கோபப்படுத்த அக்ஷராவை கடுமையாக திட்டத் தொடங்கினர்.
இந்த நிலையில் தன் அனுமதியின்றி தன் படத்தை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மும்பை சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அக்ஷரா தெரிவித்திருப்பதாவது :
