பா.ரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கத்தில், அட்டகத்தி தினேஷ் — கயல் ஆனந்தி ஜோடியாக நடித்துள்ள, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தைப் பார்த்த திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.இது குறித்து ஆனந்தி கூறுகையில், “மக்களுக்கான விஷயம் ஒன்றை ரசிக்கும்படி படமாக்கி உள்ளார் இயக்குனர். நான் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பை அளித்தார்; மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன்,” என்றார்.

