ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‛தர்பார்’. இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருக்கிறார். நிவேதா தாமஸ் ரஜினியின் மகளாக நடித்திருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.
இந்தநிலையில், சமீபத்தில் தான் அளித்த ஒரு பேட்டியில், தர்பாரில் ரஜினி நடிக்கும் கேரக்டர் பெயர் ஆதித்யா அருணாச்சலம் என ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டிருந்தார்.
அதையடுத்து தற்போது நிவேதா தாமசும் தனது டுவிட்டரில், ஆதித்யா அருணாச்சலம் என் அப்பா என்று பதிவிட்டு தான் ரஜினியின் மகளாக நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ஆக, பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்திருந்த நிவேதா தாமஸ், இப்போது தர்பாரில் ரஜினியின் மகளாகியிருக்கிறார்.

