சென்னை மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தில் மிகப்பெரிய போராளியாக மீடியாக்களால் சித்தரிக்கப்பட்டவர் ஜூலி. அதன் பிறகு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
நடிகை ஜூலை நேற்று முன்தினம் இரவு தனது ஆண் நண்பர்கள் சிலருடன் காரில் சென்றார். இரவு 9 மணியளவில் காரை வேப்பேரி சாலையின் குறுக்கே நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த வழியாக பணியை முடித்து விட்டு மப்டி உடையில் வந்த வேப்பேரி காவல் நிலைய தலைமை காவலர் பூபதி காரை ஓரமாக நிறுத்தும்படி கூறியுள்ளார். அவர் போலீஸ் என்பதை அறியாத ஜூலியின் நண்பர்கள் அவரை திட்டியுள்ளனர். பூபதியும் திட்டி உள்ளார். இந்த மோதல் கைகலப்பானது.
ஜூலியின் நண்பர்கள் மேலும் சிலரை அந்த இடத்துக்கு போனில் வரவழைத்துள்ளனர். அதன் பிறகு அனைவரும் சேர்ந்து பூபதியை தாக்கி உள்ளனர். பூபதிக்கு ஆதரவாக இன்னும் சில காவலர்களும் எதிர்தாக்குதல் நடத்தி உள்ளனர். தற்போது இரு தரப்பும் ஒரு மீது மற்றவர் புகார் அளித்துள்ளார்கள். இது குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

