பொதுவாகவே ஆண்டு இறுதியில் அதிகமான படங்கள் வெளிவரும். அந்த ஆண்டுக்கான அரசு மானியம் பெறுவதற்காகவும், விருது பட்டியலில் சேருவதற்காகவும் இப்படி படங்கள் குவியும். அந்த வரிசையில் வருகிற 14ந் தேதி, 11 படங்கள் வெளிவருகிறது.
இதில் விக்ரம் பிரபு, ஹன்சிகா நடித்த துப்பாக்கி முனை, பிரசாந்த் நடித்த ஜானி, ஆகிய படங்கள் தான் முக்கியமான மீடியம் பட்ஜெட் படங்கள். மற்ற அனைத்தும் சின்ன பட்ஜெட் படங்கள். நுங்கம்பாக்கம், தேவகோட்டை காதல், பயங்கரமான ஆளு, துலாம், பிரபா, திரு ஆகிய சிறு பட்ஜெட் படங்கள் வெளிவருகிறது.
இதுதவிர ஸ்பைடர்மேன் என்கிற ஹாலிவுட் படம் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் வெளிவருகிறது. அக்குவாமேன் என்கிற படமும் சமுத்திரபுத்ரன் என்ற பெயரில் வெளிவருகிறது. மோகன்லால் நடித்த ஓடியன் படமும் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. மொத்தம் 11 படங்கள் இந்த வாரம் வெளிவருகிறது.

