மலையாளத்தில் எடுக்கப்பட்ட செக்ஸ் படங்களில் தாராளம் காட்டி நடித்தவர் நடிகை ஷகிலா. அவரது வாழ்க்கை வரலாற்றை இப்போது படமாக்குகின்றனர். அந்தப் படத்தில் ஷகிலாவின் வேடத்தில் நடிப்பவர் ரிச்சா சத்தா. அவர், பொது இடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் குறித்து கருத்து கூறியிருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது : பெண்களுக்கு எல்லா இடங்களிலும் பாலியல் தொல்லைகள் உள்ளன. ஹிந்தி திரையுலகமும் இதற்கு விதி விலக்கு அல்ல. செக்ஸ் தொந்தரவுகளை, பெண்கள் இப்போது துணிச்சலாக பேச ஆரம்பித்து இருப்பது வரவேற்கத்தக்கது. அதனால், அவர்களுக்கு ஏற்படும் விளைவுகள் பெரிய பிரச்னையாக உள்ளது.
நானா படேகர் மீது பாலியல் புகார் சொன்ன தனு ஸ்ரீ தத்தாவின் நிலைமையை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. பாலியல் தொல்லைக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரியின் நடத்தையை கொச்சைப்படுத்துகிறார்கள். ஆனால் பாலியல் பலாத்காரம் செய்தவரை கொண்டாடுகிறார்கள்.
இதனால் தான் பல பெண்கள் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது புகார் அளிக்க தயங்குகிறார்கள். படப்பிடிப்பில் நானும் தொல்லையை சந்தித்தேன். நான் தொப்புளுக்கு மேல் வரை பேண்ட் அணிந்து இருந்தேன். தொப்புளுக்கு கீழே பேண்ட்டை இறக்கும்படி கூறினர். பேண்ட் அணிந்து தொப்புள்களை எப்படி காட்ட முடியும். நான் அதிர்ச்சியானேன். சில இயக்குனர்களுக்கு படம் இயக்குவதில் ஆர்வம் இல்லை. பெண்களின் சதையை மட்டும் பார்க்கிறார்கள்.
இவ்வாறு ரிச்சா சத்தா கூறியுள்ளார்.