தொன்னூறுகளில் இந்திப் பட உலகின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் மாதுரி தீட்ஷித். இவர் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த காலங்களில் அவருக்கு மேலாளராக பணியாற்றியவர் ராஜேஷ் நாத். அவருடைய மகன் கர்ணன் நாத். அவர், தற்போது இந்தி படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
அவரை கதாநாயகனாக வைத்து, ராஜேஷ் நாத், கன்ஸ் ஆப் பனாரஸ் என்ற படத்தை தயாரித்திருக்கிறார். நத்தாலியா கவுல், கணேஷ் ராம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியிடும் நிகழ்ச்சி சமீபத்தில் மும்பையில் நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு கட்டாயம் வர வேண்டும் என மாதுரி தீட்ஷித்தை, ராஜேஷ் நாத் அழைத்திருந்தார். அதையடுத்து, நிகழ்ச்சிக்கு வந்த மாதுரி, படத்தின் ட்ரைலரை வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
எனக்கு ரொமான்டிக் மற்றும் சென்டிமென்ட் சம்பந்தப்பட்ட படங்கள்தான் ரொம்பவும் பிடிக்கும். அப்படிப்பட்ட கதையம்சம் உள்ள படங்களில்தான் நான் நடிக்க விரும்புவேன் என என்னைப் பற்றிய ஒரு தவறான தகவல் பரப்பப்பட்டு, அப்படிப்பட்ட கதையம்சம் உள்ள படங்களே எனக்காக எடுக்கப்பட்டன. ஆனால், உண்மை அதுவல்ல. எனக்கு ஆக்ஷன் படங்கள் தான் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அப்படிப்பட்ட ஒரு படம் தான் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது, என்னுடைய வாரிசுகள் தயாராகி விட்டனர். அவர்கள், நடிப்புலகிற்கு செல்ல வேண்டும் என விரும்பியானால், அதை நான் தடுக்க மாட்டேன்.
இவ்வாறு மாதுரி பேசினார்.

