பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படத்தின் டீசர் வெளியாகி, டிரண்ட்டாகி வருகிறது. இந்த டீசரில் திருநெல்வேலி தமிழில் ரஜினி பேசும், வசனங்கள் பிரபலமாகி உள்ளன.
கியாரே செட்டிங்கா, வேங்கை மவன் ஒத்தையில நிக்கேன், தில் இருந்தா மொத்தமா வாங்கலே. இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்தை நீங்க பார்த்ததில்லல்ல, பார்ப்பீங்க. என்று இரண்டு பஞ்ச் டயலாக் பேசியுள்ளார் ரஜினி. இந்த இரண்டுமே அரசியல் கட்சிகளுக்கு அவர் மறைமுகமாக சவால் விடுவது போல அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் குறிப்பிடுகின்றனர்.
ரஜினி, அரசியல் அறிவிப்பை வெளியிட்டபோது, 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன் என்று அறிவித்தார். அதை காலா பஞ்ச் டயலாக்குடன் இணைத்து வேங்க மகன் ஒத்தையிலெ நிக்கேன், தில் இருந்தா மொத்தமா வாங்கலே என அரசியல் சாயம் பூசி வருகிறார்கள் ரசிகர்கள்.