காமெடியனாக நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி எல்கேஜி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஆர். பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியா ஆனந்த் நாயகியாக நடிக்க, ஜே.கே.ரித்தீஷ், நாஞ்சில் சம்பத் போன்ற அரசியல்வாதிகளும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
நேற்று வெளியாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லரில் தமிழ்நாடு தொடங்கி டெல்லி வரை அனைத்து அரசியல்வாதிகளையும் கிண்டல் செய்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. அதிலும் பொதுவான அரசியல் நையாண்டியாக மட்டுமே இல்லாமல் சில தலைவர்களை குறிப்பிட்டே ஆர்ஜே.பாலாஜி கலாய்த்திருப்பதால் இந்த டிரெய்லர் இணையதளங்களில் வைரலாகியிருக்கிறது.