பிரபல இயக்குநரும், நடிகருமான பார்த்திபனின் கிறுக்கல் கவிதை மற்றும் கதை- திரைக்கதை-வசனம்-இயக்கம் திரைப் படத்தின் திரைக்கதை புத்தகம் ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா ஊட்டியில் உள்ள ஹிக்கின்பாதம்ஸ் புத்தக நிலையத்தில் நடந்தது.
அதில் நடிகர் பார்த்திபன் கலந்துகொண்டார். பின், அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தியதற்கு, தமிழக அரசுக்கு நன்றி. தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட ஒரே திரைப்பட நடிகர் நான் தான் என்பதில் எனக்கு பெருமிதம். நாம் நூறு வருடங்களாகத் தான் இந்தியர்களாக உள்ளோம். ஆனால், ஆயிரம் வருடங்களாகத் தமிழனாக இருக்கிறோம். தமிழக அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அரசியல் பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது. அதனால், நான் கூடிய சீக்கிரம் அரசியலுக்கு வந்தாலும் வரலாம்.
இவ்வாறு பார்த்திபன் கூறினார்.

