நடிகர் விக்ரமின் மகன், துருவ் விக்ரம் அறிமுகமாகும், ஆதித்ய வர்மா படம், விரைவில் வெளியாக உள்ளது. கிரீசைய்யா இயக்கும் இப்படத்தில் நாயகியாக, பனிதா சந்து நடித்துள்ளார்.
படம் குறித்து, துருவ் விக்ரம் கூறுகையில், ”இப்படத்தில், ஆக் ஷன், காதல் காட்சிகளோடு, ‘சென்டிமென்ட்’ காட்சிகளும் உண்டு. அப்போதெல்லாம், என் அம்மா ஷைலஜாவைத் தான் நினைத்துக் கொள்வேன். என்னை செதுக்கியவர், அவர் தான். குறிப்பாக, பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, அடிக்கடி சொல்வார். அம்மாவுக்கு நிகரான உறவு, வேறு ஏதும் இல்லை” என்றார்.

