வெஸ்ட் இண்டீஸ் – இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் மோதிய 2 நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது. ரிலையன்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாசில் வென்ற வாரியத் தலைவர் அணி 90 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 360 ரன் குவித்து டிக்ளேர் செய்து. மயாங்க் அகர்வால் 90 ரன், ஷ்ரேயாஸ் அய்யர் 61, அங்கித் பாவ்னே 116 ரன் விளாசினர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் பிஷூ 3, கேப்ரியல் 2, லூயிஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். நேற்று நடந்த 2வது நாள் ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி 89 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 366 ரன் குவித்து டிக்ளேர் செய்ய, ஆட்டம் டிராவில் முடிந்தது. கிரெய்க் பிராத்வெய்ட் 52, பாவெல் 44, ஷாய் ஹோப் 36, டோவ்ரிச் 65, ஹாமில்டன் 23 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். அபாரமாக விளையாடிய சுனில் அம்ப்ரிஸ் 114 ரன் (98 பந்து, 17 பவுண்டரி, 5 சிக்சர்), ஷெர்மான் லூயிஸ் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வாரியத் தலைவர் அணி பந்துவீச்சில் ஆவேஷ் கான் 4, சவுரவ் குமார் 2, சக்சேனா 1 விக்கெட் வீழ்த்தினர்.இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் அக். 4ம் தேதி தொடங்குகிறது.

