கடந்த சில மாதங்களாகவே தெலுங்கு சினிமாவில் ஸ்ரீரெட்டி ஆரம்பித்து வைத்த பாலியல் சர்ச்சை விவாகரத்திற்கு பிறகு மேலும் சில திடுக்கிடும் சம்பவங்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில், தெலுங்குப்பட தயாரிப்பாளர் ஒருவர் தனது மனைவியுடன் இணைந்து, தெலுங்கு நடிகைகளை அமெரிக்காவிற்கு அழைத்து சென்று பாலியல் தொழில் செய்து வந்ததாகவும், அதையடுத்து அவர் அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
அந்த சம்பவத்திற்கு பிறகு தெலுங்கு நடிகைகள் சுற்றுலா பயணிகளாகவோ அல்லது படப்பிடிப்புகளுக்காகவோ அமெரிக்கா சென்றாலும் அங்குள்ள போலீசார் தவறான கண்ணோட்டத்திலேயே விசாரிக்கிறார்களாம்.
இந்த நிலையில், தான் நடித்து வரும் தெலுங்கு படப்பிடிப்புக்காக சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த நடிகை மெஹ்ரீன் பிர்ஜதாவிடம் அமெரிக்கா போலீசார் சந்தேகக்கண் கொண்டு துருவி துருவி விசாரித்தார்களாம். அதன்பிறகு படப்பிடிப்பு நடக்கும் விவரங்களை தெரிந்த பிறகு தான் அவரை விடுவித்தார்களாம்.
இந்த மெஹ்ரீன் பிர்ஜதா தமிழில், சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நாயகியாக நடித்தவர். தற்போது நோட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

