அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்தாண்டின் கடைசி க்ரண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அமெரிக்க ஓப்பன் தொடர் நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இந்தத் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரின் ஆண்கள் காலிறுதி சுற்றுக்கு நடால், ஃபெடரர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
முதல் இரண்டு ஆட்டங்களில் ஐந்தாவது செட் வரை போராடி வென்ற ஃபெடரர் அடுத்த அடுத்த சுற்றுகளில் எளிதாக வெற்றிகளைப் பெற்று வருகிறார். நேற்று நடந்த இந்தப் போட்டியில் ஃபெடரர் மிக எளிதாக 6-4, 6-2, 7-5 என நேர் செட்களில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலம் ஃபெடரர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மிக எளிதாக வெற்றி பெற்றார். இந்தப் போட்டியில் 6-2, 6-4, 6-1 என எளிதாக வென்றார். நாளை நடைபெறும் போட்டியில் ஃபெடரர் டெல் போட்ரொவை எதிர்கொள்கிறார்.
பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் சானியா மிர்சா சீன வீராங்கனை பெங் இணை காலிறுதிக்கு முன்னேறியது. இந்த இணை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-2, 3-6, 7-6(7-2) என்ற செட்களில் வெற்றி பெற்றது.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா இணை மூன்றாவது செட் வரை கடுமையாகப் போராடி காலிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியது. நாளை முதல் காலிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.