அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை எட்டியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் முதலாவது தொற்றாளர் இனங்காணப்பட்டு இரண்டு ஆண்டுகளில் 10 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளார்கள்.
10 இலட்சம் பேரின் மரணம் என்பது பலரின் மனதில் வைரஸால் ஏற்படும் அச்சுறுத்தல் குறைந்திருந்தாலும், தொற்றுநோயால் ஏற்பட்ட அதிர்ச்சியூட்டும் துக்கம் மற்றும் இழப்பை அப்பட்டமாக நினைவூட்டுகிறது.
இது ஒவ்வொரு 327 அமெரிக்கர்களுக்கும் ஒரு மரணம் அல்லது சான் பிரான்சிஸ்கோ மற்றும் சியாட்டிலின் நகரங்களின் மொத்த மக்கள் தொகையை விட அதிகமாக உள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதி உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) கொரோனா வைரஸ் தொற்றை உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்த நேரத்தில், அமெரிக்காவில் வைரஸ் தொற்று 36 உயிர்களை பறித்திருந்தது.
அடுத்தடுத்த மாதங்களில், கொடிய வைரஸ் காட்டுத்தீ போல பரவியது,
இதேவேளை, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க உயிரிழப்பு எண்ணிக்கை முதலாம் உலகப் போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் இறப்புகளை விட அதிகமாக இருந்தது.
அத்தோடு, கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 405,000 க்கும் அதிகமான இறப்புகள் பதிவு செய்யப்பட்ட இரண்டாம் உலகப் போரின் அமெரிக்க இராணுவ இழப்புகளை விட அதிகமாக இருந்தது.
உகலாவிய ரீதியில் கொரோனா தொற்றால் 60 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளார்கள்.
ஆனால் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் மற்றும் கொரோனா பரவலால் மறைமுக விளைவாக உயிரிழந்தவர்கள் உட்பட உண்மையான எண்ணிக்கை ஒரு கோடியே 50 இலட்சத்திற்கும் அருகில் இருக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இவ் ஆண்டில் ஜனவரி மாதத்தில் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதலில் உயிரிழந்தவர்களை விட சராசரியாக ஒவ்வொரு நாளும் கொரோனாவால் அதிகமான மக்கள் உயரிழந்தனர்.
கொரோனா தொற்றினால் அதிகம் வயதானவர்கள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை இரையாக்கியது, ஆனால் அது ஆரோக்கியமான இளைஞர்களையும் விடவில்லை, 1,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்றது.
213,000 அமெரிக்க குழந்தைகள் தொற்றுநோய்களின் போது குறைந்தபட்சம் ஒரு பெற்றோரை அல்லது முதன்மை பராமரிப்பாளரை இழந்தது, அளவிட முடியாத உணர்ச்சிகரமான பாதிப்பை ஏற்படுத்தியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.