அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‛பிகில்’ படம் அக்டோபர் 25-ந்தேதி திரைக்கு வருகிறது. நயன்தாரா, இந்துஜா, விவேக், கதிர், யோகிபாபு, ஜாக்கி ஷெராப், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படம் தெலுங்கில் விசில் என்ற பெயரில் வெளியாகிறது. அமெரிக்காவில் பிகில் படத்தை 250 தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். அந்த வகையில், இதற்கு முன்பு அமெரிக்காவில் வெளியான விஜய் படங்களை விட இப்படம் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது.

