அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்பவர்களில் இந்தியர்களே அதிகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி அமெரிக்காவில் ரியல் எஸ்டேட்டில் அதிகம் முதலீடு செய்பவர்களில் இந்தியர்கள் 5 வது இடத்தில் உள்ளனர். கடந்த 12 மாதங்களில் அமெரிக்காவில் வீடுகள் வாங்குவதில் இந்தியர்கள் 7.8 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளனர்.
மேலும் 31.7 பில்லியன் டாலர்களை முதலீடு செய்து சீனர்கள் முதலிடத்தில் உள்ளனர். மேலும் கனடா, பிரிட்டன், மெக்சிகன் மற்றும் இந்தியர்களே அமெரிக்காவில் அதிக சொத்துக்களை வாங்குபவர்களாக உள்ளனர்.
இதேபோல் இந்தியர்கள் 2015 ஏப்ரல் முதல் 2016 மார்ச் மாதம் வரை 6.1 பில்லியன் டாலர்களை சொத்துக்களை வாங்க செலவிட்டுள்ளனர். அமெரிக்காவில் இந்தியர்கள் வாங்கும் சொத்துக்கள் மற்றும் அதற்காக முதலீடு செய்யப்படும் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
மேலும் சொத்துக்களை வாங்கும் சீனா, இந்தியா மற்றும் மெக்சிகோ நாட்டினர் அமெரிக்காவிலேயே வசிக்கின்றனர் என்றும் கனடா மற்றும் பிரிட்டன் நாட்டினர் அங்கு வசிக்காதவர்களாகவும் உள்ளனர் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.