பாலிவுட்டின் மாஜி வில்லன் நடிகர் ஷக்தி கபூர். இவரது வாரிசு நடிகை ஸ்ரத்தா கபூர். தற்போது, இவர் தாவுத் இப்ராஹிமின் சகோதரியான ஹசீனா வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள ஹசீனா படத்தில் ஹசீனாவாக நடித்திருக்கிறார். இப்படத்தின் பிரஸ்மீட்டில் பங்கேற்ற ஸ்ரத்தா பேசும்போது… “ஒருவேளை நான் படம் இயக்கும் சூழல் வந்தால், நிச்சயம் என் அப்பாவை வைத்து ஒரு படம் இயக்க ஆசைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.
ஹசீனா படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி ரிலீஸாக உள்ளது.

