சினிமாவில் நீண்டகாலமாக போராடி வருகிறார் இயக்குனர் பாக்யராஜின் மகன் சாந்தனு. பல படங்களில் நடித்தாலும் அவருக்கு இன்னும் நிலையான இடம் கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் நடித்துள்ள மாஸ்டர் உள்ளிட்ட சில படங்களை பெரிதும் எதிர்பார்க்கிறார்.
இந்நிலையில் புதியவர் ஸ்ரீஜர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். நாயகியாக அதுல்யா நடிக்க, இவர்களுடன் மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாக்யராஜ் சிறப்பு வேடத்தில் தோன்றுகிறார். இப்படத்திற்கு முருங்கைகாய் சிப்ஸ் என பெயரிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
பாக்யராஜிற்கும், முருங்கைக்காய்க்கும் ஒரு டச் உள்ளது. அதை வைத்து அவர் மகனின் படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர். அத்துடன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் புதுமண தம்பதியரின் முதலிரவுக்கு தயாராவது போன்று வடிவமைத்துள்ளனர்.

