முக்காபாஸ் படத்தைத் தொடர்ந்து தற்போது காதல் கதை ஒன்றை படமாக்க போகிறார் டைரக்டர் அனுராக் காஸ்யாப். இப்படத்திற்கு மன்மர்ஜியான் என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் அபிஷேக் பச்சன் நடிக்க, அவருடன் டாப்சி பன்னு மற்றும் விக்கி கவுசல் ஆகியோர் நடிக்கிறார்களாம். இப்படத்தின் சூட்டிங் பிப்ரவரி மாதம் பஞ்சாப்பில் துவங்கப்பட உள்ளதாம். இந்த தகவலை உறுதி செய்துள்ள அனுராக் காஸ்யாப் கூறுகையில், ஆனந்த் எல் ராயுடன் பணியாற்றுவதை நினைக்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் டைரக்டருக்கு அளிக்கும் படைப்பு சுதந்திரம், வழங்கும் ஒத்துழைப்பு டைரக்டருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும். மன்மர்ஜியான் படத்தின் மூலம் மீண்டும் அவருடன் பணியாற்றுவது உற்சாகத்தை அளிக்கிறது என்றார்.
மன்மர்ஜியான் படத்தை அனுராக் காஸ்யாப் இயக்குகிறார். ஆனந்த் எல் ராய் மற்றும் பன்டோம் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.