பிரேமம் படம் மூலம் வெளிச்சத்துக்கு வந்த கதாநாயகிகளில் அனுபமா பரமேஸ்வரனும் ஒருவர். தற்போது மலையாளம், தமிழில் வாய்ப்பு இல்லவிட்டாலும் தெலுங்கில் ஒன்றிரண்டு படங்களில் கதநாயகியாக நடித்து வருகிறார் அனுபமா. அதில் ஒன்றுதான் தேஜ் ஐ லவ் யூ.. சாய் தரம் தேஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட அனுபமா பரமேஸ்வரன் வழக்கமாக ஹீரோயின்கள் விழாக்களுக்கு அணிந்து வருவதுபோல கவர்ச்சி உடைகளை அணியாமல் கைத்தறி நெசவால் நெய்யப்பட்ட சேலையை அணிந்து வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். இதுபோன்று பல விழாக்களில் தனது வித்தியாசமான ஆடைகளால் அசத்தும் அனுபமாவின் பின்னணியில் ஒரு இளைஞர் டீமே இருக்கிறதாம்.
ஆம். பேஷன் டிசைனிங் படித்து முடித்து வாய்ப்பு தேடிவரும் இளைஞர்களையும் மாணவர்களையும் அழைத்து தனக்கு ஏற்றார்போல வித்தியாசமான உடைகளை வடிவமைக சொல்கிறாராம் அனுபமா. அவர்களது திறமையை ஊக்கப்படுத்தும் விதமாகவே இதுபோன்று வாய்ப்புக்களை கொடுத்துள்ளாராம் அனுபமா.