அட்டகத்தி படத்தில் அறிமுகமான தினேஷ், அதன் பிறகு “குக்கூ, திருடன் போலீஸ், விசாரணை” போன்ற படங்களில் கவனம் ஈர்த்தார். இடையில் அவர் நடித்த சில படங்கள் கவனம் பெறவில்லை. கபாலி படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு நடித்த உள்குத்து படமும் சரியாக அமையவில்லை. தற்போது, தினேஷ் நடிக்கும் படம் அண்ணனுக்கு ஜே.
இதில் அவருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, மயில்சாமி, வையாபுரி நடித்திருக்கிறார்கள், அரோல் குரோலி இசை அமைத்துள்ளார், விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், வெற்றி மாறன் உதவியாளர் ராஜ்குமார் இயக்கி உள்ளார்.
