‘நீ ஒண்ணு டிரென்ட் பண்ணா, நான் ஒண்ணு டிரென்ட் பண்ணுவேன்’ என்று தான் டுவிட்டரில் விஜய், அஜித் ரசிகர்களுக்கு இடையேயான சண்டை நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு மிகவும் கீழ்த்தரமான ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி இருவரது ரசிகர்களும் மிக மோசமாக சண்டையிட்டுக் கொண்டார்கள்.
விஜய் நாயகனாக அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு’ படம் வெளிவந்து இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதனால், விஜய் ரசிகர்கள் #27YrsOKwEmperorVIJAY என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி 10 லட்சம் வரை பதிவிட்டு பெருமைப்பட்டு வருகின்றனர்.
அதற்குப் போட்டியாக அஜித் ரசிகர்கள் #மக்கள்தலைவன்அஜித் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டுவீட் செய்து வருகின்றனர். இன்றைய இந்த டுவிட்டர் சண்டை இத்துடன் நிற்குமா அல்லது வழக்கம் போல கீழ்த்தரமாக போகுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

