பொங்கல் நாளில் வெளியான நடிகர் தனுஷ் நடித்திருக்கும் பட்டாஸ் படம், பெரிய அளவில் பேசப்படவில்லை. என்றாலும், இந்தப் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக, நடிகை சிநேகா நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின், அவர் நடித்திருக்கிறார்.
அடிமுறை என்ற பாரம்பரிய தமிழ் தற்காப்பு கலையை மையக் கருவாக கொண்டு, பட்டாஸ் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில், சிநேகா அடிமுறை தற்காப்பு கலையைக் கொண்டு, எதிரிகளை தாக்குவதுபோல, சில காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், அந்த தற்காப்புக் கலையை மையமாக வைத்து நடிகை சிநேகா சண்டை பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அடிமுறை சண்டை காட்சியின் பிரத்யேக பயிற்சியை பிரேசில் சண்டை பயிற்சியாளர் ஜோவ் டல்டேகனிடம் கற்று, அதன்படியே, படத்தில் நடித்திருக்கிறார் நடிகை சிநேகா. அவர் சொல்லிக் கொடுத்தபடியே, அடிமுறை தற்காப்புக் கலை பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள்தான், அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் இருக்கின்றன.

