ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிப்பில் உருவாகி வரும் படம் லிசா. இந்தியாவின் முதல் ஸ்டீரியோஸ்கோப் 3D தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படத்தில் அஞ்சலி கதையின் நாயகியாக நடிக்கிறார்.
சாம் ஜோன்ஸ் என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகி பாபு நடிக்கும் இந்த படம் பேய் படமாக உருவாகிறது. பி.ஜி.முத்தையாவிடம் உதவியாளராக பணிபுரிந்த ராஜு விஸ்வநாத் இயக்குகிறார். இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
ஹாரர் கதையில் உருவாகி உள்ள லிசா டீசர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.

