அஜீத் இமேஜ் பற்றி கவலைப் படமாமல் ஒயிட்ஹேர் லுக்கில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது பாணிக்கு இப்போது விக்ரமும் மாறி இருக்கிறார். நடிகை லைலா அவருடன் விமானம் பயணத்தில் எடுத்த செல்பியை தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார். லைலாவும், விக்ரமும், தில் மற்றும் பிதாமகன் படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
தற்போது விக்ரம் பல மொழிகளில் தயாராகும் மகாவீர் கர்ணா படத்தில் நடிக்கிறார். லைலா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் நடுவராக இருக்கிறார். விரைவில் படங்களில் அக்கா அண்ணி வேடங்களில் நடிக்க இருக்கிறார். இதற்காக கதை கேட்டு வருகிறார்.

