தமிழ் சினிமாவில் இருந்து விரட்டப்பட்ட பல நடிகைகள் ஹிந்தியில் பிரபலமாகி இருக்கிறார்கள். ஹேமமாலினி, வித்யா பாலன் என பெரிய பட்டியல் இருக்கிறது. அந்த வரிசையில் யாமி கவுதமிற்கும் இடம் உண்டு. ‛தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ என்ற படத்தில் ஜெய் ஜோடியாக நடித்தார். இந்தப் படம் தயாராகி பல ஆண்டுகளுக்கு பிறகுதான் வெளிவந்தது. படம் வெளியானபோது யாமி கவுதம் ஹிந்தியில் பெரிய நடிகை ஆகிவிட்டார். அதன் பிறகு அவர் தமிழ் படத்தின் பக்கம் திரும்பவில்லை.
சர்கார் 3, காபில், சனம்ரே, ஆக்ஷன் ஜாக்சன் உள்பட பல படங்களில் நடித்தார். இப்போது மீண்டும் தமிழுக்கு வருகிறார். அதுவும் அஜித் ஜோடியாக. வினோத் இயக்கும் வலிமை படத்தில் அஜித் ஜோடியாக நஸ்ரியா நசிம், பிரியங்கா சோப்ரா என பலரது பெயர்கள் பேசப்பட்டது. இப்போது யாமி கவுதம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஓரிரு நாட்களில் இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.

