பாலிவுட்டின் வசூல் நடிகர்களில் ஒருவரான ஷாரூக்கான், டுவிட்டர் தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு ரசிகர், “அஜித் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்” என்று கேட்டதற்கு ‘என் நண்பன்’ என பதிலளித்தார் ஷாரூக்கான்.
அஜித் பற்றி பதிலளித்துவிட்ட பிறகு விஜய் பற்றிய கேள்விக்கும் பதிலளித்தாக வேண்டுமே, விஜய் ரசிகர் ஒருவர், ‘விஜய் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்’ என்று கேட்டதற்கு, ‘அற்புதம்’ என்று பதிலளித்துள்ளார்.
மேலும் ஒரு ரசிகர், ”எதிர்காலத்தில் நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்கும் திட்டம் உள்ளதா” என்று கேட்டதற்கு, “நிச்சயமாக, அந்த மொழி குறித்த எனது புரிதல் நன்றாகவே இருக்கும்” என்று பதிலளித்துள்ளார்.
அஜித், விஜய் பற்றி அடுத்தடுத்து ஷாரூக் பதிலளித்த ‘My Friend, Awesome இரண்டில் எது டுவிட்டர் டிரென்டிங்கில் முதலிடம் பிடிக்கப் போகிறது என்ற சண்டை இப்போது ஆரம்பமாகிவிடும்.

