டைரக்டர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த அசுரன் படம் சமீபத்தில் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தை, பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அசுரன் படத்தை தியேட்டரில் பார்ப்பது போன்ற போட்டோவை டுவிட்டரில் வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், அசுரன் படத்தை பாராட்டி கருத்து பதிவிட்டிருந்தார்.
அதில், “அசுரன் – படம் மட்டுமல்ல பாடம்!
பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்!
கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷிற்கும் பாராட்டுகள்” என குறிப்பிட்டிருந்தார்.
ஸ்டாலினின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் தனுஷ் கருத்து பதிவிட்டுள்ளார். இதில்,
“காலம் ஒதுக்கி
அசுரனைப் பார்த்ததற்கும்
பாராட்டியதற்கும் மிக்க நன்றி ஐயா.
பெருமகிழ்ச்சி அடைகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

