ரஜினியுடன் இணைந்து பேட்ட படத்தில் நடித்து தமிழில் அடியெடுத்து வைத்தவர் மாளவிகா மோகனன். அந்தப்படத்தில் கிடைத்த புகழ் வெளிச்சம் அவருக்கு விஜய்யின் மாஸ்டர் பட வாய்ப்பை பெற்று தந்தது. இதோ தற்போது தனுஷுக்கு ஜோடியாக கார்த்த்க் நரேன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
அதுமட்டுமல்ல இந்த ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து தன்னை பற்றிய பரபரப்பு செய்திகள் சோஷியல் மீடியாவில் வெளியாகிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதிலும் மாளவிகா மோகனன் கவனமாகவே இருக்கிறார்.. அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழங்கால இளவரசி போன்ற கெட்டப்பில் போட்டோஷூட் நடத்தி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் எல்லாம் இளசுகளை கிறங்கடிக்கும் ரகம். ஒருவேளை இந்த புகைப்படங்கள் தான் மீரா மிதுனின் காதுகளில் புகை வர வைத்துவிட்டதோ.