இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். முழங்கால் மூட்டு காயம் காரணமாக 2017 அக்டோபரில் இருந்து ஓய்வெடுத்து வரும் அவர் தற்போது கர்ப்பமாக உள்ளார். வரும் அக்டோபர் மாதம் குழந்தை பிறக்க உள்ளதை சானியாவின் தந்தையும் பயிற்சியாளருமான இம்ரான் நேற்று அறிவித்தார். சானியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட படமும் அதை உறுதி செய்வதாக இருந்தது. குழந்தையின் பெயருடன் மிர்சா மாலிக் என தாய், தந்தை இருவரது பெயரையும் இனிஷியலாக வைக்க முடிவு செய்துள்ளனர்.