கிரானைட் ஊழல்களை விசாரித்து வரும் தங்களுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் புகார் மனு அளித்துள்ளார். 00:00 00:00 மதுரையில் கிரானைட் முறைகேடு நடைபெற்று வருவதாக கடந்த 2013-ஆம் ஆண்டு சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 2014-ஆம் ஆண்டு தமிழகத்தில் மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணையை நடத்த உத்தரவிட்டது.
இதற்கு ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் 40 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் விசாரணை நடத்தி, முறைகேடு தொடர்பான முழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர்.













