ரசிகர்களை தாண்டி பிரபலங்களிலும் BiggBoss நிகழ்ச்சிக்கு ஆதரவாக நிறைய பேர் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து ஸ்ரீபிரியா, காமெடி நடிகர் சதீஷ், நடன இயக்குனர் சதீஷ் ஆகியோர் தொடர்ந்து தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நடன இயக்குனர் சதீஷ் டுவிட்டரில் ஓவியாவை தவிர்த்து மற்றவர்களை திட்டிக் கொண்டு வந்தார்.
இதனை பார்த்த சிம்பு, யாரையும் தவறாக பேச வேண்டாம், நமக்கு யாரை பிடிக்கிறதோ அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போம். கண்டிப்பாக தவறுகளை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்று டுவிட் செய்துள்ளார்.