சீனாவில் சிமெண்ட் சாக்குகளை கொண்டு தயாரிக்கப்பட்ட உடையை திருமால் ஆடையாக மணப்பெண் அணிந்து கொண்ட விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. கான்ஷூ மாகாணத்தை சேர்ந்த 28 வயதான டான் லீலி என்ற பெண்ணின் சிறுவயதிலேயே அவரது தந்தை புற்றுநோயால் இறந்துவிட்டார். அதன் பிறகு பல வேலை செய்து குடும்ப பொறுப்பை தலையில் சுமந்த டான் லீலி, தனக்கென ஒரு வீடு கட்டிய பின்னரே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கனவில் இருந்துள்ளார். மிகுந்த போராட்டத்திற்கு பிறகு வீட்டையும் கட்டி முடித்தவர். சில நாட்களுக்கு முன் யங் முன் கை என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு தான் கட்டிய வீட்டிற்கு பயன்படுத்தப்பட்ட சிமெண்ட் சாக்குகளையே ஆடையாக வடிவமைத்து அணிந்திருந்தார். மூன்றே மணி நேரத்தில் இந்த சிமெண்ட் உடை தயாரிக்கப்பட்டதாகவும், இந்த ஆடையை பார்க்கும்போதெல்லாம் சொந்த வீடு கட்டிய கஷ்டம் நினைவுக்கு வரும் என்று டான் லீலி கூறுகிறார்.

