2040 க்குள் பெட்ரோல்-டீசல் வாகனங்களுக்கு தடை செய்ய இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் மந்திரி கூறுகையில்,
2040-ம் ஆண்டிற்குள் பெட்ரோல்-டீசல் வாகனங்கள் விற்பனை செய்வதற்கு தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இலக்கை அடைவது கடினமானது என்றாலும் அதனை நடைமுறைபடுத்தியே தீருவோம் எனக்கூறியுள்ளார்.
இங்கிலாந்து அரசின் இந்த அதிரடி முடிவால் கார் உற்பத்தியாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.