சீனாவின் பல நிறுவனங்களும் ஆராய்ச்சி அமைப்புகளும் உக்ரைனிற்கு எதிரான போரில் ரஸ்யாவிற்கு ஆதரவளிக்கின்றன என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் தொழில்துறை மற்றும் பாதுகாப்பு பணியகம் தனது அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.அமெரிக்க வர்த்தக திணைக்களம் தனது தொழில்துறை மற்றும் பாதுகாப்பு பணியகத்தின் ஊடாக 9 நாடுகளை சேர்ந்த 36 நிறுவனங்களை தனது வர்த்தக கட்டுப்பாட்டு பட்டியலில் இணைத்துள்ளது.
இதில் ஆறு நிறுவனங்கள் ரஸ்யாவின் இராணுவ நடவடிக்கைகளிற்கு உதவுகின்றன என்ற குற்றச்சாட்டை அமெரிக்கா முன்வைத்துள்ளது.
உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பின் பின்னர் விதிக்கப்பட்ட தடைகளை மீறி இந்த நிறுவனங்கள் உதவிவருகின்றன அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
பெப்ரவரி 24 முதல் ரஸ்யாவிற்குதொடர்ந்தும் இராணுவபயன்பாட்டிற்கான பொருட்களை விநியோகித்து வந்தமை காரணமாக தனது தொழில்நுட்பங்களை இந்த நிறுவனங்கள் பயன்படுத்துவதற்கு அமெரிக்கா கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
2018 முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பட்டியலில் உள்ள இரண்டு சீன நிறுவனங்கள் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பின்னரும் ரஸ்ய இராணுவத்திற்கு தொடர்ந்து உதவிகளை வழங்குகின்றன என அமெரிக்கா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.