மட்டக்களப்பு கரடியனாறு காவல்துறை பிரிவிலுள்ள கரைக்காடு பிரதேசத்தில் அரச காணியில் அத்துமீறி சட்டவிரோதமாக நிலத்தை தோண்டிய சூரியவல பகுதியைச் சோந்த 3 இளைஞர்களை நேற்று (17) மாலை கைது செய்ததாக கரடியனாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய காவல்துறையினர் குறித்த பகுதிக்கு சென்று அங்கு சட்டவிரோமாக நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த சூரியவல பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்களை நிலத்தை தோண்டி சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்ததுடன் இதற்கு பயன்படுத்திய பக்கோ இயந்திரம், பிக்கப் வாகனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது கைது செய்யப்பட்டவர்களை இன்று (18) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.