பாலாஜி மோகன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்து 2018ம் ஆண்டு வெளிவந்த படம் ‘மாரி 2’. இப்படத்தில் இடம் பெற்ற ‘ரௌடி பேபி’ பாடல் ஆடியோவாக வெளிவந்த போதே சூப்பர் ஹிட் ஆனது. படம் வெளியான பின் அந்த பாடலின் வீடியோவும் ரசிகர்களை அதிகம் ரசிக்க வைத்தது. அதையடுத்து யு டியூபில் வெளியான பாடல் தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து வருகிறது.
அந்த சாதனைகளின் உச்சமாக விரைவில் 1 பில்லியன் பார்வைகளைத் தொட உள்ளது. தற்போது 99 கோடியே 90 லட்சம் பார்வைகளைத் தொட்டுவிட்டது. இன்றோ அல்லது நாளையோ 100 கோடியைத் தொட்டுவிடும். தென்னிந்தியத் திரையுலகில் 1 பில்லியன் சாதனையை படைக்கப் போகும் முதல் பாடல் என்ற தனிப்பெரும் சாதனையை இந்தப் பாடல் படைக்க உள்ளது.
இதற்காக தனுஷ் ரசிகர்களும், படக்குழுவினரும் சமூக வலைத்தளங்களில் தனித்த கொண்டாட்டங்களைத் திட்டமிட்டுள்ளனர்.