சிம்புவை வைத்து ஈஸ்வரன் படத்தை முடித்து விட்ட இயக்குனர் சுசீந்திரன், அதற்கு முன்பாக நடிகர் ஜெய்யை வைத்து ஒரு படத்தை இயக்கி வந்தார். பெயரிடப்படாத இப்படத்தில் நாயகியாக மீனாட்சியும், மற்ற நடிகர்களாக சத்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் நாயகனாக நடித்திருக்கும் நடிகர் ஜெய் முதல்முறையாக இப்படத்திற்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கு ‘சிவ சிவா’ என பெயரிட்டுள்ளனர்.