இரும்புத்திரை, ஹீரோ’ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் அடுத்து கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குகிறார். பெயரிடப்படாத இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன்குமார் தயாரிக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். தீபாவளி திருநாளில் பூஜையுடன் இப்படத்தின் பாடல் பதிவு ஆரம்பமானது. வித்தியாசமான கதைக்களத்தில் பிரமாண்டமான ஆக்ஷன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களைக் கொண்டு உருவாகிறது. பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் அதுப்பற்றிய விபரங்கள் அறிவிக்கப்பட உள்ளது.