புதிதாக திறக்கப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட பாதைகளுக்கான கட்டணங்கள் குறித்த வத்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சினால் குறித்த நெடுஞ்சாலைகளுக்கான கட்டணங்கள் பற்றிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அந்தரவெவவிலிருந்து அம்பாந்தோட்டை வரையான 16.558 கி.மீ. தூரத்துக்கும், பரவாகும்புகவிலிருந்து அந்தரவெவ ஊடாக மத்தல வரையான தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 21.79 கி.மீ. துாரத்துக்கும், கடவத்தையிலிருந்து கெரவலபிட்டி வரையான 28.867 கி.மீ. வெளிப்புற சுற்றுவட்ட துாரத்துக்குமான கட்டணங்களே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த வியாழக்கிழமை (07) குறித்த நெடுஞ்சாலைகள் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.