யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வீட்டிற்குள் நுழைந்த நாக பாம்பினை பிடிக்க முயன்றவரை பாம்பு தீண்டியதினால் முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இணுவுல் துரை வீதியில் உள்ள ராமு என்னும் 61 வயது முதியவரே இவ்வாறு பாம்புக் கடிக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனும்மிக்கப்பட்டுளார்.
குறித்த முதியவரின் மகளின் வீட்டிற்குள் நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை நாகபாம்பு ஒன்று புகுந்துள்ளது . இதனால் வெள்ளிக் கிழமை என்பதனால் அதனை அடித்து கொல்லாதுவிரட்ட முனைந்துள்ளனர். இதன்போது குறித்த பாம்பினை ஓர் போத்தலில் பிடித்துச் சென்று அகற்றுவதற்கு எண்ணி அதனை பிடிக்க முயன்றுள்ளார்.
இருப்பினும் பிடிக்க முயன்ற சமயம் பாம்பு கையில் கடித்தமையினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 9ம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்