கானா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் கணினி வசதி இல்லாததால் மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த பள்ளியில் ஆசிரியாராக செயல்பட்டு வரும் க்வாட்வோ ஹாட்டிஷ் என்பவர், மாணவர்களின் புரிதலுக்காக microsoft word-இன் படத்தை வரைந்து பாடம் கற்பித்தார்.
இந்நிலையில், அவர் வரைந்து பாடம் நடத்தும் புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார், அந்த புகைப்படத்தை கண்ட பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.