பாகிஸ்தானின் பல்வேறு சிறைகளில், 527 இந்தியர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர்; இதில் பெரும்பாலானோர் மீனவர்கள். பாகிஸ்தான் சிறைகளில் உள்ள, வெளிநாட்டவர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பாகிஸ்தானியர் குறித்த வழக்கில், பாக்., அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கை:
பாகிஸ்தானின் பல்வேறு சிறைகளில், 527 இந்தியர்கள் உட்பட, 996 வெளிநாட்டவர் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டவர்கள். உலகின் பல்வேறு பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட சிறைகளில், 9,476 பாகிஸ்தானியர் கைதிகளாக உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
