நீச்சல் உடையில் திருடனை பிடித்த பெண் பொலிஸ்

நீச்சல் உடையில் திருடனை பிடித்த பெண் பொலிஸ்

சுவீடனில் நீச்சல் உடையில் திருடனை பிடித்த பெண் பொலிஸை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோலை சேர்ந்த பெண் பொலிஸ் அதிகாரி மிகேலா கெல்னர். இவர் அங்குள்ள கடற்கரை பூங்காவில் தனது தோழிகளுடன் நீச்சல் உடையில் சூரிய குளியலில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு அடையாளம் தெரியாத நபர் பத்திரிகை மற்றும் புத்தகங்கள் விற்றுக் கொண்டு வந்தான். அவன் பொலிஸ் அதிகாரி மிகேலா கெல்னர் மற்றும் அவரது தோழிகளிடமும் பத்திரிகை வேண்டுமா என கேட்டார். அவர்கள் வேண்டாம் என தெரிவித்தனர்.

திடீர் என்று அந்த நபர் அங்கு வைத்திருந்த விலை உயர்ந்த கையடக்கதொலைபேசியை திருடிக் கொண்டு ஓட்டம் பிடித்தான். உடனே, கெல்னர் நீச்சல் உடையுடன் விரட்டிச் சென்று அந்த திருடனை மடக்கி கீழே தள்ளினார். இருந்தும் அவன் எழுந்து ஓட முயன்றான்.

அவனை விடாமல் கட்டிப்புரண்டு சண்டை போட்டார். இறுதியில் அந்த திருடனை கைது செய்து அடித்து உதைத்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

– See more at: http://www.canadamirror.com/canada/67045.html#sthash.yTslX72S.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

Recent News