தனது இறுதி கோடை விடுமுறையில் மசாசுசெட்ஸ் சென்றுள்ள ஒபாமா
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது பதவிக்காலத்தின் இறுதி கோடை விடுமுறையை கழிப்பதற்காக, தனது குடும்பத்துடன் மசாசுசெட்ஸ்ஸில் உள்ள மார்த்தா வின்யார்ட் தீவுக்கு சென்றுள்ளார்.
ஒபாமா, அவரது மனைவி மிசெல் ஒபாமா, மகள்களான மலியா மற்றும் சாஷாவும் ஆகியோர் நேற்று (சனிக்கிழமை) தனது குடும்பத்தினருடன் வொஷிங்டனில் இருந்து புறப்பட்டனர். அவர்கள்; ஓகஸ்ட் 6ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை தமது விடுமுறையைக் களிக்கவுள்ளனர்.
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட உள்ளனர். ஜனாதிபதி ஒபாமா ஹிலாரி கிளிண்டனுக்கு தனது ஆதரவைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.