கொடிய மூளை- உண்ணும் amoebaவினால் 11-வயது பெண் மரணம்.
யு.எஸ்.-தென் கரோலினாவை சேர்ந்த 11வயது பெண் கொடிய மூளை- உண்ணும் ஒரு வகை amoebaவினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்து மரணமானாள்.ஹன்னா கத்தரின் கொலின்ஸ் என்ற இப்பெண் வெள்ளிக்கிழமை இறந்துள்ளாள்.
தொடர்ந்து உருமாறிக்கொண்டிருக்கும் ஒரு வகை அணுவினால் இந்த நோய் பரவுகின்றதென கூறப்படுகின்றது.
யூலை மாதம் 24ல் தென் கரோலினாவில் உள்ள எடிஸ்ரொ ஆற்றில் நீந்திக்கொண்டிருக்கையில யாரோ இந்த அணுவை வெளிப்படுத்தி இருக்கலாம் என கருதப்படுகின்றது. இந்த அணுவானது இயற்கையாக வெப்பமான புதிய தண்ணீரில் காணப்படுவதோடு மூக்குவரை சென்றால் அபாயகரமானது.
நீர்க்கட்டி நிலை இடப்புறம் காணப்படுவது வளரும் நிலை மத்தி மற்றும் சவுக்குயிர் நிலை வலது புறம் காணப்படுகின்றது.