இவரைத் தெரிகிறதா?? நாடுதழுவிய பிடியாணை…
ஸ்டீவன் மில்லர் என்ற நபர் கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் நான்காவது சந்தேக நபரை தேடும் பணிகளை நியூபவுண்ட்லாந்து பொலிஸார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், முதல் கொலை குற்றவாளியும், பலவந்தப்படுத்தி அடைத்து வைத்தல், கொள்ளை, தீவைப்பு போன்ற பல்வேறு குற்றச்சாட்டின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள 23 வயதுடைய செல்சி ஜோன் லூகாஸ் என்பவரை கைது செய்ய நாடு தழுவிய கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சி.ஜே அல்லது செல்சி கிளார்க் என அழைக்கப்படும் லூகாஸ், ஆயுதம் தாங்கியவரும் ஆபத்தானவரும் ஆவார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதுவரை ஸ்டீவன் மில்லர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 35, 25 மற்றும் 19 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக பலவந்தப்படுத்தி அடைத்து வைத்தல், கொள்ளை, தீவைப்பு ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
– See more at: http://www.canadamirror.com/canada/67564.html#sthash.4RKTnjFl.dpuf